சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2022 09:05
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மதியம் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் அம்மன், விநாயகருடன் கடை கோயிலிலிருந்து பத்ரகாளியம்மன் கோயிலுக்கு புறப்பாட சென்றார். தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்தது. இரவு கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை , சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்பிகை திருவீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவு, அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மே 10 ல் பொங்கல் திருவிழா, மறுநாள் கயிறு குத்து திருவிழா, மே 13 ல் தேரோட்டம் நடைபெறும்.