திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2022 01:05
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நாளை கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா துவங்கி, இம்மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது.திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளாக சித்திரை மாத பிரம்மோற்சவம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், நாளை சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இம்மாதம் 12ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.நிகழ்ச்சி நிரல்:தேதி உற்சவம் காலை 9:30 மணி உற்சவம் இரவு 7:00 மணிமே 5 கொடியேற்றம் - காலை 5:30 மணி கேடய உலா6 வெள்ளி சூரிய பிரபை பூத வாகனம்7 சிம்ம வாகனம் ஆட்டு கிடாய் வாகனம்8 பல்லக்குசேவை வெள்ளி நாக வாகனம்9 அன்ன வாகனம் வெள்ளி மயில் வாகனம்10 புலி வாகனம் மாலை 4:30 மணி யானை வாகனம்11 தங்கத்தேர் இரவு 7:00 மணி12 யாளி வாகனம் தெய்வானை திருக்கல்யாணம்13 கேடய உலா சண்முகர் உற்சவம்14 தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம் கொடி இறக்கம்.