பதிவு செய்த நாள்
07
மே
2022
01:05
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் உள்ள, தண்டு மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெற்று வருகிறது.மேட்டுப்பாளையம் பாரதி நகரில், மிகவும் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் செய்து வருகின்றனர்.
இம்மாதம், 2ம் தேதி முனியப்பன் சுவாமிக்கு கிராம சாந்தி பூஜை செய்யப்பட்டது. மூன்றாம் தேதி அக்னி கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து நட்டனர்.வரும், பத்தாம் தேதி அம்மன் அழைப்பு, 11ம் தேதி சாந்திநகர் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து, முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலமும், 12 ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 13ம் தேதி மஞ்சள் நீராட்டு நடைபெற உள்ளது.சடைச்சி மாரியம்மன்மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில், காப்பி ஒர்க்ஸ் அருகில் சடைச்சி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 51ம் ஆண்டு திருவிழா மாதம், 2ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. மூன்றாம் தேதி கம்பம் நட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வருகின்றனர். நேற்று மாலை செல்வபுரம் விநாயகர் கோவிலில் இருந்து, பூவோடு கரகம், பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.எட்டாம் தேதி விளக்கு பூஜையும், சுமங்கலி பூஜையும் நடைபெற உள்ளது. பத்தாம் தேதி பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைத்து வருதலும், 11ம் தேதி பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், 12ம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் மறு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.