நாகம்மன் கோவில் விழா : வளைகாப்பு அலங்காரத்தில் அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2022 12:05
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளி உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் வளைகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தமிழகம், புதுச்சேரி பகுதிகளிலிருந்து குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் பல்லவி, கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.