சூலூர்: ரங்கநாதபுரம் கே.என்.கே., நகர் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடப்பட்டது.
கண்ணம்பாளையம் பேரூராட்சி, ரங்கநாதபுரம் கே.என்.கே., நகரில் உள்ள தங்க முத்துமாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருக்கல்யாண உற்சவ திருவிழா, மே 3 ம்தேதி பண்டிகை சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 7 ம்தேதி கம்பம் நடப்பட்டது. நேற்று காலை விநாயகர் பொங்கல் வைக்கப்பட்டது. இரவு கம்பத்தில் பூவோடு வைத்து பூஜை நடந்தது. இன்று அம்மை அழைத்தலும், அலங்கார பூஜையும் நடந்தது. நாளை அதிகாலை திருக்கல்யாணமும், மாவிளக்கு மற்றும் பொங்கல் பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.