பழநி: பழநி மலைக்கோயிலில் 3வது வின்சின் ரோப் மாற்றப்பட்டது.
பழநி மலைக்கோயில் சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மூன்று வின்ச்கள் பழநி மலைக்கோயிலில் உள்ளன. மூன்றாவது வின்ச்சின் ரோப் பழுதடைந்ததால் இன்று தரமுள்ள ரோப் வரவழைக்கப்பட்டு மாற்றப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்பு மூன்றாவது வின்சில் பொருத்தப்பட்டது. நாளை மூன்றாவது வின்ச் சேவை செயல்படும்.