எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே பூசாரிபட்டியில் மலைநாச்சியம்மனுக்கு கரகப் படையல் திருவிழா நடந்தது. மே 6 ம் தேதி எஸ்.புதூர் ஊரணியில் தண்ணீர் தீர்வை நடத்தப்பட்டு திருவிழா துவங்கியது. 7 நாள் திருவிழாவாக தினமும் அம்மன் சாமியாடி கரகம் சுமந்து ஆடினார். அவருடன் மற்ற 7 சாமியாடிகளும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினர். திருவிழாவின் இறுதி நாளான நேற்று பூசாரிபட்டி கோயில் வீடு முன்பாக சாமியாட்டம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.