பதிவு செய்த நாள்
13
மே
2022
04:05
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம் இரண்டாவது நாளாக களைகட்டியது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேரோட்டம், இரண்டாவது நாளாக உற்சாகம் குறையாமல் நடந்தது. கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக கருதப்படும். அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருத்தேரோட்டம் நேற்று துவங்கியது. கோவில் நிலையில் இருந்து இழுத்து வரப்பட்ட தேர், வடக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. இன்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் உற்சாகம் குறையால், பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்தனர். மதியம், 2:45 மணிக்கு நிலை சென்று சேர்ந்தது. அப்போது பக்தர்கள், கரகோஷம் எழுப்பி, அரோகரா கோஷம் எழுப்பினர். நாளை காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீ கருணாம்பிகை அம்மன், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் தேரோட்டம் நடக்கிறது.