கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2022 10:05
கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மலர் கண்காட்சி நிறைவடைந்ததை அடுத்து மலர் வழிபாட்டு விழா நடந்தது. கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக உள்ளது குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் மலர்க்கண்காட்சி நிறைவின் போது மலர் வழிபாடு நடக்கும்.
இவ்விழாவை கோடை இன்டர்நேஷனல் விடுதி சார்பில் ஆண்டுதோறும் நடத்துவர். நடப்பாண்டில் பல்வேறு மலர்களைக் கொண்டு முன் மண்டபம் பிரகாரங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து சுவாமிக்கு ஏராளமான மலர்கள் குவியலாக அமைக்கப்பட்டிருந்தது. ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். முன்னதாக சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் நடந்தன. விழாவில் பழநி முருகன் கோயில் இணை ஆணையர் நடராஜன், கண்காணிப்பாளர் முரளி, கோடை இன்டர்நேஷனல் விடுதி உரிமையாளர் பாண்டுரங்கன், நகர்மன்ற துணைத்தலைவர் மாயக்கண்ணன், உட்பட கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். எராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.