ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் 2000 மரக்கன்றுகளை நடும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2022 10:05
தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நேற்று ஞாயிறன்று ஸ்ரீ சாரதா வனம் அமைப்பதற்கு 2000 மரக்கன்றுகளை நடும் பணி ஓரிரு நாட்களில் நிறைவேறிவிடும். "வன சிருஷ்டி செம்மல்" திரு ராஜுலு ஐயா அவர்கள் இந்த வனத்தை வடிவமைத்து வருகிறார். இந்த வனம் நமது கிராம மையம் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் பிராண வாயுவை அதிகரிக்கும் oxygen hub ஆக மாறிவிடும். ஸ்ரீ சாரதா வனம் நிழலையும் ஆக்சிஜனையும் தருவதோடு ஒரு வருடத்திலேயே எண்ணற்ற மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.