உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2022 05:05
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகம் நடந்தது.
சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் ஆதிபரஞ்சோதி சகலோக சபை மடம் மற்றும் கோசாலை உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று சிறப்பு யாக பூஜை மற்றும் கோ பூஜை நடைபெறும். சபையில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வேண்டுதலுக்காக மிளகாய் வத்தளை கொண்டுவந்தனர். இதனைக் கொண்டு சபையின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி பிரத்தியங்கிரா தேவி யாக பூஜையை நடத்தினார். அப்போது யாக குண்டத்தில் வேதமந்திரம் முழங்க மூட்டை மூட்டையாக மிளகாய் வற்றலை கொட்டி உலக நன்மை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. முன்னதாக மடத்தில் வளர்க்கப்படும் 50க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு பக்தர்கள் உணவு வழங்கி கோ பூஜை நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.