பதிவு செய்த நாள்
06
ஜூன்
2022
04:06
தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே வைகை கிராமத்தில், பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட முதல்கட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கோ பூஜை, சூரிய நமஸ்காரம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹுதி, தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்பு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனிதநீர், சிவாச்சாரியார்களால் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.