பாலமேடு: பாலமேடு கிழக்கு தெரு தேவேந்திர குல வேளாளர் அரசகுடும்பன் வகையறா பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பெரியகருப்பு சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 4 முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை கோ பூஜை, 2ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார் மலையன் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.