திருப்போரூர், திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நேற்று, விமரிசையாக நடந்தது.கூடுவாஞ்சேரி அடுத்த கல்வாய் கிராமத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, அக்னி வசந்த விழா, மே 26ல் துவங்கி, நேற்று நிறைவடைந்தது. விழாவில் தினம், மகாபாரத சொற்பொழிவு, நாடகம், சுவாமி வீதி உலா நடந்தது.நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் துரியோதன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இரவு, காப்பு கட்டிய பக்தர்கள், தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கல்வாய், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.