சூலூர்: காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில், 41 வது பிரதிஷ்டை தினவிழா நடந்தது. சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 41 வது பிரதிஷ்டை தினத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம் துவங்கியது. கலச பூஜை முடிந்து அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை, பஜனை, பகவதி சேவை, அத்தாழ பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று வழிபட்டனர்.