சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 03:06
ஈரோடு : சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் அருகில் உள்ள வாணியர் பிள்ளையார் மற்றும்அன்பிற்பிரியாள் அம்மன் கோவிலில் அன்பிற்பிரியாள் அம்மன், தருமதாவளவன் 44ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவவிழா நடைபெற்றது. முன்னதாக கடந்த ஜூன் 1ம்தேதி மாதர் சங்கத்தினரால் முளைப்பாலிகை போடப்பட்டது. ஜூன் 7ம்தேதி காலை 6மணிக்கு விழாக்கொடியேற்றப்பட்டது.இரவு 7மணிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்று காலை அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. 9மணிக்கு சுவாமிக்கு ஜவுளி,திருமாங்கல்யம்,மற்றும் தாய் வீட்டு சீர்வரிசை எடுத்து முக்கியவீதிகள் வழியாக ஊர்வலம் வந்து கோவிலை அடைந்தனர்.மதியம் சிருங்கேரி மஹா சன்னி தானம் பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதிதீர்த்த சுவாமிகள்,சன்னிதானம் பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீவிதுசேகரபாரதிசுவாமிகள் ஆசியுடன் அருள்மிகு ஸ்ரீஅன்பிற்பிரியாள் அம்மனுக்கும் ஸ்ரீதருமதாவளவனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.அதைதொடர்ந்து சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு திருமணமாகாத ஆண்கள்,பெண்கள்,உட்பட 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம் தாலுகா வாணியர் செட்டியார் சங்கத்தலைவர் கோபு தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.