பதிவு செய்த நாள்
08
ஜூன்
2022
12:06
உடுமலை: உடுமலை காமாட்சியம்மன் கோவில், மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.உடுமலை தென்னை மரத்து வீதி, ஏகாம்பரேஸ்வரர் சமேத விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, இன்று காலை, 7:00 மணிக்கு, நவநீத கிருஷ்ணர் கோவிலிலிருந்து, விசேஷ சந்தியுடன் ஆச்சார்ய வர்ணம், 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. மாலை, சித்தி புத்தி விநாயகர் கோவிலிருந்து, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜையுடன் மகா மேரு விக்கிரகம் காமாட்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.நாளை (9ம் தேதி) காலை, 7:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், மகா தீபாராதனை நடக்கிறது. 10:30 மணிக்கு, பால கணபதி, பாலமுருகன், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் உற்சவர் மண்டப கும்பாபிஷேகமும், 11:00 மணிக்கு, மூலவர் சன்னதி மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.தொடர்ந்து அன்னதானம், 11:00 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:30க்கு, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கல்யாண உற்சவமும், 7:00 மணிக்கு, ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.