நயினார்கோவிலில் வைகாசி வசந்த உற்சவ தேரோட்டம் : சுவாமி, அம்பாள் வீதி வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2022 06:06
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்த உற்சவ தேரோட்டம் நடந்தது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்பு பெற்ற நாகநாதசுவாமி கோயிலில் ஜூன் 3 காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்தனர். ஜூன் 8 அன்று சமணர்களுக்கு முக்தி கொடுத்தல், திருஞானசம்பந்தருக்கு திருமுலை பாலூட்டல், ஜூன் 10 ல் திருமுறைபட்டயம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு நாகநாதசுவாமி மற்றும் சவுந்தர்ய நாயகி அம்மன் தனித்தனி தேரில் அமர்ந்து நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர். பக்தர்கள் ஹரஹர, சிவசிவ கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஜூன் 12 தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.