தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2022 07:06
தளவாய்புரம்: ராஜபாளையம் அடுத்த தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் தேரோட்டம் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பின் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அன்னை தவம் பெற்ற நயகி உடனுறை, அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தினை நேற்று காலை 11:00 மணி அளவில் பரம்பரை அறங்காவலர் துரை. ரத்தினகுமார் வடம் பிடித்து துவக்கி வைத்தார். பெரிய தேரில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி பிரியாவிடை அம்மனுடனும், இரண்டாவது வந்த சிறிய தேரில் தவம் பெற்ற நாயகி அம்மன் வீற்றிருந்தார். பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்று இரண்டு தேர்களையும் நான்கு ரத வீதிகளில் சுற்றி நிலைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தேர் சென்ற பாதையில் அங்க பிரதட்சணம் செய்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணிகளை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்தனர்.