ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு ரகுபட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். காலை 8:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் வைபவம் துவங்கியது. நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்து, காலை 9:30 மணிக்கு தேர் நிலையம் வந்து சேர்ந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் முத்துராஜா, செயல் அலுவலர் ஜவஹர், கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.