சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் விரட்டு திருவிழா நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் திருவிழாவான ஜூன் 10ம் தேதி இரவு சமணர் கழுவேற்றம் நிகழ்வை நினைவு கூறும் வகையில் கழுவன் விரட்டு திருவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி கழுவன் வேடமிட்டவரை கயிறால் கட்டி நாட்டார்கள் அமர்ந்திருந்த சபைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான இளைஞர்கள் கழுவனை விரட்டினர். கழுவன் வேடமிட்டவர் திரும்ப விரட்டுவது போல் பாசாங்கு செய்தார். இத்திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நாளை ஜூன் 13ம் தேதி மாலை 3:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது.