சிலர் கசங்கிய அழுக்கு உடை, கலைந்த கேசம் என எப்போதும் ஏனோ தானோ என்றிருப்பர். பணி செய்யும் இடத்தைக் கூட துாய்மையாக வைக்க மாட்டார்கள். கேட்டால் பணிச்சுமை, நேரமின்மை என நொண்டிச்சாக்கு சொல்லுவார்கள். கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்கிறது பழமொழி. துாய்மையின் அவசியம் பற்றி, ‘ நறுமணத்தை விட துாய்மையின் மணம் மேலானது’ என்கிறார் நாயகம்.