சந்தை கவுமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2022 04:06
தேனி: தேனி சந்தை கவுமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர்.
தேனி சந்தை கவுமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் மின் அலங்கராத்தில் வீதி உலா வந்து மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரைவடம் பிடித்து இழுத்தனர். இன்று இரவு 9:00 மணிக்கு அம்மன் புஷ்பபல்லக்கில் மின் அலங்காரத்தில், தேனி, அல்லிநகரம், பொம்மயகவுண்டன்பட்டியில் உள்ள முக்கிய வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் மண்டகப்படி பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராம கமிட்டியினர், கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.