பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன், கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சுப்பு குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.