வெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. சுபவிஷயம் லட்சுமிகரம் பொருந்தியதாக இருக்க வேண்டியே வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது.
வீட்டில் இலுப்பெண்ணெய் விளக்கு ஏற்றக் கூடாது என்பது ஏன்? ஒவ்வொரு வீட்டிலும் பல காலமாக நல்லெண்ணெயால் பஞ்சுத் திரியைக் கொண்டு விளக்கேற்றுதல் என்னும் பழக்கமே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் செய்து வந்த இந்த செயல் சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, நாமும் நம் முன்னோர்கள் வழக்கத்தை பின்பற்றி, நல்லெண்ணெய் மற்றும் பஞ்சுத் திரியைக் கொண்டே தினசரி விளக்கு ஏற்றலாம். யாரோ (அஞ்ஞானியான) சிலர் சொல்லியதைக் கேட்டு, அதில் மாறுதலைச் செய்ய விரும்பி கடலெண்ணெயால் விளக்கேற்றினால், வீட்டில் கடன்கள் ஏற்படும் அல்லது அதிகரிக்கும். சூடு செய்த எண்ணெயால் விளக்கேற்றினால் அது மனதில் தீய எண்ணங்களையும் சூட்டையும் (கோப - தாபத்தையும்) ஏற்படுத்தும். கசப்பான இலுப்பெண்ணெயால் ஏற்றப்படும் தீபம். வீட்டிலுள்ளோரிடம் ஒருவருக்கொருவர் மனக் கசப்பை ஏற்படுத்தும். அல்லது அதிகரிக்கச் செய்யும். ஆகவே, வீட்டில் முன்னோர்கள் பழக்கத்தை ஒட்டி, நல்லெண்ணெய் மற்றும் பஞ்சுத் திரியால் தீபம் ஏற்றுவதே மிகச் சிறந்தது.