வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2022 05:06
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் செயல் அலுவலர் ராமநாதன் காங்கேயம் ஆய்வாளர் அபிநயா முன்னிலையில் திறக்கப்பட்டது. கடைசியாக 2022 ஏப்ரல் 29ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 55 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் 5 லட்சத்து 96 ஆயிரத்து 970 ரூபாய் மற்றும் தங்கம் 27.300 கிராம், வெள்ளி 53.500 கிராம் உண்டியலில் இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் தேங்காய் பழக் கடை ஓராண்டுக்கு அமைத்திட ஏலம் விடப்பட்டது. செல்லமுத்து என்பவர் 3 லட்சத்து 90 ஆயிரத்து 600 ரூபாய்க்கு எடுத்தார்.