உடுமலை: உடுமலை அமராவதிநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் ஏகாதசி மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை அமராவதிநகரில் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஏகாதசியையொட்டி, சதாசிவ லிங்கேஸ்வரர் சன்னதியில், சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சதாசிவ லிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும், ஆனி மாத வெள்ளியையொட்டி ஸ்ரீ வனத்துர்க்கையம்மன் சன்னதியிலும், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.