ராமேஸ்வரத்தில் கோடை வெயிலில் காத்திருந்து புனித நீராடும் அவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2022 07:07
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வடக்கு ரத வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து பக்தர்கள் தீர்த்தங்களில் புனித நீராடினர்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவர். இப்புனித நீராட பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் கோயில் வடக்கு ரத வீதியில் நீண்ட வரிசையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் வயதான பக்தர்கள், குழந்தைகள் வெயில் தாக்கத்தில் சோர்வடைகின்றனர். காலணி இன்றி காத்திருப்பதால் பக்தர்களின் பாதங்கள் புண்ணாகி விடுகிறது. ஓராண்டிற்கு கோயில் உண்டியல் காணிக்கை ரூ.15 கோடி வரும் நிலையில் பக்தர்களுக்கு நிழல் பந்தல், குடிநீர் வசதி ஏற்படுத்தாமல் கோயில் நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.