கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2022 12:07
தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இவ்வாண்டு ஆனித் திருவிழா நேற்று துவங்கியது. காலையில் சிவலிங்கம் வரையப்பட்ட கோவிலில் ஏற்றப்பட வேண்டிய கொடி கோவில் ஊரணியை சுற்றி வந்து கோவிலில் வைத்து கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளுடன் ஆனித் திருவிழா துவங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர் , பெரியநாயகி அம்மன் உட்பட பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை ஆறு மணியளவில் திருவிழாவிற்கான காப்புகட்டுதல் நிகழ்வு நடந்தது. சுவாமி அம்மன் வீதி உலா நடந்தது. தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் சுவாமி அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. ஐந்தாம் நாள் சுவாமி அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. 9 ம் நாள் தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் அதற்குள் தேர் வெள்ளோட்டம் நடத்தபட வேண்டும். வெள்ளோட்டம் நடைபெறவில்லை எனில் சப்பரத்தில் சுவாமி உலா நடைபெறும்.