கன்னியாகுமரி :திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்பட்டது.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கடந்த 29ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் அதனை தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆதிகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.