கமுதி: கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் சித்தி விநாயகர், அய்யனார், கருப்புசாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கு வருஷாபிஷேகம் பூஜை நடந்தது.காலை கணபதி ஹோமம் தொடங்கி யாகசாலை பூஜை நடந்தது.பின்பு கும்ப அலங்கார புனிதநீர் ஊற்றப்பட்டது.சித்தி விநாயகர், அய்யனார், கருப்புசாமி ஆகிய பரிவார தெய்வங்களுக்கு பால்,சந்தனம்,பன்னீர், மூலிகை திரவியப்பொடி உட்பட 21 வகையான அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.விழாகமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கமுதி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.