திருநள்ளாறு கோவிலில் அகல் தீபம் ஏற்றும் முறையை தொடங்கவேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2022 06:07
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் மீண்டும் அகல் தீபம் ஏற்ற மண்பாண்ட தொழிலாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்கால் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் அகல்விளக்கு ஏற்றுவது குறித்து முதல்வர் ரெங்கசாமிக்கு அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலுக்கு வெளியூர் பகுதியிலிருந்து ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வேண்டுதலுக்கு தீபம் ஏற்றுப்பட்டது. ஆனால் திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் தீபத்திற்கு பதில் அகல்விளக்கு தராமல் தீரிநூல் மட்டும் கொடுத்து தீசட்டியில் போட பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு சனிபகவான் கோவிலுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா காரணமாக இரண்டு ஆண்டு காலமாக அகல் தீபம் ஏற்றுதல் நிறுத்தப்பட்டனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களில் அகல் விளக்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் புதுச்சேரி மாநில திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை எனவே மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் அகல் தீபம் ஏற்றும் முறையை பின்பற்ற வேண்டும் என்று முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளர் கோரிக்கை வைத்துள்ளனர்.