Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமாஞ்சோலையில் முளைப்பாரி உற்சவ ... சதுரகிரியில் ஆனி மாத பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
400 ஆண்டுகள் பழமையான நவநீதகிருஷ்ண பெருமாள் கோவில் ஏகாதசி மண்டபம் புது பொலிவு
எழுத்தின் அளவு:
400 ஆண்டுகள் பழமையான நவநீதகிருஷ்ண பெருமாள் கோவில் ஏகாதசி மண்டபம் புது பொலிவு

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
04:07

தஞ்சாவூர், பாபநாசம் அருகே நவநீத கிருஷ்ண கோவிலுக்கு சொந்தமான ஏகாதசி மண்படம் கிராம மக்கள் முயற்சியால் புதுப்பொழிவு பெற்றுள்ளது.

ஸ்ரீராமரின் சத்யதாமத்தைப் பேனும் அவதாரக் கடமையின் போது வனவாசத்தில், 14,000 வீரர்களுடன் கரன், விதுாஷண அரக்கர்கள் தன்னந் தனியாக இருந்த ஸ்ரீராமரைச் சூழ்ந்து போரிட்ட போது ராமபிரான் தனித்தே அவர்களை எதிர்கொண்டு அரக்கர்களை வதைக்க வேண்டிய நிலை வந்துற்றது. இதில் தம்மைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்காக ஸ்ரீராமர் பாபநாசத்தில், குடமுருட்டி ஆற்றில் புனித நீராடி நுாற்றெட்டு லிங்கங்களைப் பிரதிட்டை செய்தார். இது போநாசத்தில் நாம் காணும் நுாற்றெட்டு சிவாலயம். நவநீதம் எனில் வெண்ணெய். கண் கொடுத்த பெருமாள் எனும் அபூர்வமா திருநாமத்துடன் ஸ்ரீகிருஷ்ணர் அருளும் ஒரு திவ்யத்தலம் பண்டைய நேத்ரபுரியா இப்போதைய வங்காரம்பேட்டை ஸ்ரீநவதி கிருஷ்ண ஆலய பூமி.  சுந்தர மூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் இறைவன் முன் தானளித்த வாக்கை மீறியமையால் இரு கண் பார்வையையும் இழக்க வேண்டியதானது.

கொடுத்த வாக்கை நாணயத்துடன் காப்பாற்றுதலும் சத்யதர்மத்தைப் பேணுதலே எனும் சீலமிகு பாடத்தை நமக்குப் புகட்டும் முகத்தான் பகவான் தம் இறைத் துாதுவராம் சுந்தரர் போன்ற மஹான்கள் மூலம் நடத்தும் இறைலீலைகள் இவை. இறை ஆக்ஞைப்படியாக கண் பார்வை இல்லாத தன்மையொடு சுந்தரர் பல தலங்களுக்கும் புனித யாத்திரை புரிந்து வழிபட்டுக் காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நீராடி இடக்கண் பார்வையையும், திருவாரூர் கமலாலயத்தில் மூழ்கி எழுந்து வலக்கண் பார்வையையும் மீளப் ஆகவே புராணப் பூர்வமாகக் காஞ்சிபுரம். திருவாரூர், எண்கண், வங்காரம்பேட்டை,சுவாமிமலை போன்ற பல நேத்ரயோக சக்தித் தலங்களில் பல் தெய்வ மூர்த்திகள் பக்தர்களுக்குக் கண் பார்வையை அருளிச் செய்துள்ளனர். சுவாமிமலையில் கண் கொடுத்த விநாயகர் அருள்கிறார்.

வங்காரம்பேட்டை ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு கண் கொடுத்த பெருமாள் என்ற பெயர் உற்பவிக்கப் புராணக் காரணங்கள் பல உள்ளது. இத்தகையை சிறப்பு பெற்ற தலமாக உள்ள தஞ்சாவூர் மாவட்டம் வங்காரம்பேட்டையில், கண்கொடுத்த பெருமாள் கோவில் என அழைக்கப்படும், ஸ்ரீருக்மிணி,ஸ்ரீசத்யபாமா சமதே நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலில் உள்ளது. இங்கு சுக்ராசார்யார் கண் பார்வையை பெற்ற நேத்ரயோசக்தி பூமியாக விளங்குகிறது. இங்குள்ள 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வைகுண்ட ஏகாதசி உற்சவ மண்டபம் சிதலமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து கிராமமக்கள் ஒன்றிணைந்து ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்தனர். மேலும், மண்டப முகப்பிலும், உள்ளேயும் வண்ண தெய்வ ஓவியங்களுடன் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது; சோழர்கள் காலத்தில் கட்டப்படதாக கூறப்படும் ஏகாதசி மண்படபத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெருமாள் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக செய்யப்பட்டு வந்தது. ஆனால் காலபோக்கில் இந்த மண்டபம் தேசமடைந்தது. பழமையான சுண்ணாம்பு கொண்டப்பட்ட கட்டபட்டிருந்ததை மீண்டும் கிராம மக்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் மண்டபத்தை சீரமைத்து புது பொழிவுடன் காட்சியளிக்கிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமத் பொய்கையாழ்வார் சபை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெருவில் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
 சென்னை; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை ... மேலும்
 
temple news
 வால்பாறை; புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, வால்பாறை அடுத்துள்ள கருமலை பாலாஜி கோவிலில் சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar