Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மிதுனம் : ஆடி மாத பலன் சிம்மம் : ஆடி மாத பலன் சிம்மம் : ஆடி மாத பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
கடகம் : ஆடி மாத பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடகம் : ஆடி மாத பலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2022
02:07

புனர்பூசம் - 4:
மனதிற்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாக செய்து வெற்றி பெறுவீர்கள். நக்ஷத்ரநாதன் குருவின் சஞ்சாரத்தால் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். சனி பார்வையால் எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணியாளர்கள் நம்பிக்கையு டன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். கட்சிப்பணிகள் மிக துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: குரு பகவானை வணங்கி வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 17, ஆக. 12
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 25

பூசம்:
பழமையான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. சுக்கிரன் சஞ்சாரத்தால் அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனு சரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பாதிபதி சூரியன் ராசியில் இருக்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்கு வதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 17, 18, ஆக. 13
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 26

ஆயில்யம்:
ரத்தம் சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த மாதம் எந்த காரியத்தை எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும். வாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு வந்து சேரும். சிலர் மேலிடத்தின் நேரடி அங்கீகாரத்தைப் பெறுவர். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.

பரிகாரம்: குலதெய்வத்தை நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்னை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 18, 19, ஆக. 14
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 27

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar