பதிவு செய்த நாள்
20
ஜூலை
2022
08:07
ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாமிரபரணிக் கரை ஓரத்தில் அமைந்துள்ளது சேர்மன் அருணாசல சுவாமி கோயில். இங்கு ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி அமாவாசை திருவிழா கோலாகலமாக நடக்கும். இந்த ஆண்டு ஆடி அமாவாசைத் திருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா 30ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. தினசரி சுவாமி கோயில் வளாகத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 28ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு மேல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிேஷக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 11 மணிக்கு 1-ம் காலம் கற்பகப் பென் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 29-ம் தேதி காலை 4 மணிக்கு 2-ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிேஷகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், அதன்பின் ஏரல் கர வீதி தரிசனம், ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயிலில் மாலை 6 மணிக்கு தாகசாந்தி, ஏரல் நகர் வீதிகளில் தரிசனம், 30-ம் தேதி 12-ம் திருவிழாவுடன் ஆடி அமாவாசை திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.