உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2022 06:07
உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்செரிதல் விழா நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு சர்வ மலர் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயில் வளாகத்தில் உள்ள அம்மிக்கல்லில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். மாவிளக்கு, நெய் விளக்கு எடுக்கப்பட்டது. காலையில் அக்னி சட்டி, பால்குடம் உள்ளிட்ட ஊர்வலம் நடந்தது. சிம்ம வாகனத்தில் உற்ஸவர் வராகி அம்மன் நான்குரத வீதிகளிலும் உலா வந்தார். பின் பூச்செரிதல் விழா நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.