மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன.
சிறுமுகை வ.உ.சி., நகரில் ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு விஷ்ணு துர்க்கை அம்மன் உள்பட ஐந்து சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. முன்னதாக பவானி ஆற்றிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் வாயிலாக அபிஷேகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை செய்யப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 29ம் தேதி, ஆகஸ்ட் 5ம் தேதி, 12ம் தேதி ஆகிய மூன்று வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு பால் அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.