பதிவு செய்த நாள்
25
ஜூலை
2022
01:07
கரூர் : கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த தெய்வ திருமண விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். கரூர் ஸ்ரீ மகா அபி ேஷக குழு சார்பில், 24வது தெய்வ திருமண விழா கடந்த, 16ல் முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது. பின், நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு விக்னேஷ்வரா பூஜையுடன் விழா துவங்கியது.
இரவு, 7:00 மணிக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டு இரவு, 8:00 மணிக்கு இல்லத்தில் மங்களம் தரும் ஜோதிடம் என்ற தலைப்பில் அருளுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று காலை, 7:30 மணிக்கு சிவக்குமார் குழுவினரின் மங்கள இசை, காலை, 10:30 மணிக்கு தெய்வ திருமணம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு தமிழிசை பாடல்கள் பாடப்பட்டன. பரதநாட்டியம், கொங்கு ஒயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை, கரூர் ஸ்ரீ மகா அபி ேஷக குழுவினர் செய்திருந்தனர்.