கூடுவாஞ்சேரி: காயரம்பேடு கன்னியம்மன் கோவில் 21ம் ஆண்டு தீ மிதி திருவிழா விமரிசையாக நடந்தது.நந்திவரம்- - கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடில், கன்னியம்மன் கோவில் 21ம் ஆண்டு தீமிதி திருவிழா 22ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில் குவிந்த பெண் பக்தர்கள், பொங்கலிட்டு படையலிட்டனர்.காப்பு கட்டிய பக்தர்கள், மாலை 6:30 மணிக்கு, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து அருள்பாலித்தார். திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடு களை காயரம்பேடு மதுராமூலக்கழனி கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்தனர்.