சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2022 07:08
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் இவ்விழா நடக்கிறது.கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளாக விழா நடக்கவில்லை.இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடிபட்டம் வீதி உலா வந்து கோமதி அம்மன் சன்னதியில் தங்க கொடிமரத்தில் அதிகாலை 5:32 மணிக்கு ஏற்றப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் ராஜா கடம்பூர் ராஜு இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழா நடக்கும் 12 நாட்களிலும் தினமும் காலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வருவார். தினமும் மண்டகப்படி விழாவும் நடக்கிறது.ஆக. 8 காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆக. 10 தெற்குரதவீதியில் மாலை 5:30 மணிக்கு சிவபெருமான் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயண சுவாமியாக காட்சியளிக்கும் தபசு காட்சி நடக்கிறது