மலப்புரம் திருநாவாய நவா முகுந்தர் கோவிலில் நிறை புத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2022 07:08
பாலக்காடு: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ளது புகழ் பெற்ற திருனாவாய நவா முகுந்தர் கோவில். இங்கு எல்லா ஆண்டும் அடி அமாவசை முடிந்துள்ள ஞாயிற்றுக்கிழமை நிறை புதுக்கிரி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா நேற்று அஷ்ட்ட திரவிய மஹா கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்தது. இது கல்புழை நாராயணன் நம்பூதியின் தலைமையை நடந்தன. தொடர்ந்து கஜ பூஜை, யானைகளுக்கு உணவு வழங்கும் யானையூட்டு நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. நிறைக்கு தேவையான கதிர் பாரம்பரிய முறைப்படி களத்தும்பரம்பில் சந்திரனின் பயிர் நிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து பந்தீரடி பூஜைக்கு பிறகு மேல்சாந்தி அரீக்கரை வாசுதேவன் நம்பூதிரியின் தலைமையில் நெல் கதிரை ஏற்று வாங்கி தலையில் ஏந்தி செண்டை மேளத்துடன் எடுத்து வந்து சிறப்பு பூஜை நடத்தினர்.