வேடசந்தூர்: வேடசந்தூர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூரம் விழா மற்றும் கஞ்சிக்கலைய ஊர்வலம் நேற்று நடந்தது. விழாவையொட்டி மழை வளம், விவசாயம், வியாபாரம் சிறப்படைய சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் அனைத்து மக்களின் மனித நேயம் வளரவும், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து பெண் பக்தர்களின் கஞ்சிக்கலையம் ஊர்வலம், வழிகாட்டு மன்றத்தில் துவங்கி, வடமதுரை ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஆத்து மேடு, மார்க்கெட் ரோடு வழியாக மீண்டும் வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. அங்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற நிர்வாகிகளும், அனைத்து செவ்வாடை தொண்டர்களும் செய்திருந்தனர்.