அவிநாசி: எல்லை மாகாளியம்மன் கோவில் 35ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
அவிநாசியில் உள்ள சீனிவாசபுரம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடக்கு நோக்கி நின்ற காலத்தில் எல்லையை காக்கும் தெய்வமாக மாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதனையடுத்து 35ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம், பூவோடு, மங்கள வாத்தியம் மற்றும் வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்சிகளுடன் கோவிலுக்கு வந்து சேர்த்தனர் மேலும், நேற்று காலை அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், மாவிளக்கு எடுத்து வருதல் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.