உறியடிக்க ஏணியுடன் வீதியில் வலம் வந்த லட்சுமி நரசிம்ம சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2022 10:08
திண்டிவனம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி திண்டிவனம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், உறியடி திருவிழா நடந்தது.
திண்டிவனம் யாதவ மகா சபை சார்பில் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழா லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடந்தது, அதையொட்டி கிருஷ்ணர் வேடம் அணிந்த பக்தர்கள் வீடுகளில் வெண்ணெய் எடுக்கும் வைபவம், அலங்கரிக்கப்பட்ட குதிரைகளின் நடன நிகழ்ச்சி, பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்த லட்சுமி நரசிம்ம சுவாமி ஏணி மீது ஏறி உறியடி செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில்,ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.