ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே தென்னம்பிள்ளை வலசையில் மயூரநாதப் பெருமான், பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் கோயில் உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி அளவில் மூலவர் கால பைரவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் உமாமகேஸ்வரன் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.