பெரியகுளம்: பெரியகுளம் வடகரை கவுரி துளசி அம்மன் கோயிலில் உற்சவ விழா நடந்து வருகிறது.
பெரியகுளம் வடகரை கவுரி துளசி அம்மன் கோவிலில் 34ம் ஆண்டு மற்றும் கிருஷ்ண ஜெயந்திவிழாவை முன்னிட்டு உற்சவ விழா நடந்து வருகிறது. கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், குத்து விளக்கு பூஜை அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் கவுரி துளசி அம்மன் காட்சியளித்தார். நாளை (ஆக.21ல்) அம்மன் சோலை செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தலைவர் மலர்மணி, துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் பாண்டியராஜ் உட்பட நிர்வாகிகள் செய்தனர்.