அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் உள்ள ராதாகிருஷ்ணன் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகஸ்ட் 11 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். குத்து விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கண்ணன் பிறப்பு, ராதாகிருஷ்ணன் வீதி உலா, புலியாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் இறுதியாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வழுக்கு மரம் ஏறினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெரிய புளியம்பட்டி சின்னப்புளியம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.