அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2022 06:08
கும்பகோணம்: அய்யாவாடி மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடைபெற்ற நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அய்யாவாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பஞ்சபாண்டவர்களும், ராவணன் மகன் மேகநாதனும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு, மகா பிரத்தியங்கிரா தேவியை மண்டபத்தில் எழுந்துள்ள செய்து சிறப்பு ஜபம், ஹோமம் நடத்தப்பட்டது. மதியம் ஒரு மணிக்கு மங்கள வாத்தியம் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்த்து நிகும்பலா யத்தை நடத்தி வைத்தார். அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னாள் எம்எல்ஏ. ராமநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.