ஒரே நாளில் ஏழு கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2022 03:08
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சோழன்பேட்டை கிராமத்தில் ஒரே நாளில் ஏழு கோயில்கள் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழன்பேட்டை கிராமத்தில் அக்ரகாரத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத சபாபதீசுவரர் ஆலயம், ஸ்ரீ தில்லைமா காளியம்மன் ஆலயம், ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலயம், ஸ்ரீ ராமர் மடம், ஸ்ரீ மன்மதீஸ்வரர் ஆலயம், சப்தகன்னி ஆலயம் ஆகிய ஏழு கோயில்கள் அமைந்துள்ளன. பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த கோயில்கள் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மகா பூர்ணாகுதியுடன் மகா தீபாரதனை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது. அதனை எடுத்து புனித கடங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயங்களை வந்தடைந்தது. வேதியர்கள் மந்திரம் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித கடங்களின் நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை அடுத்து மூலவர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருப்பணி குழு தலைவர் சூரி.விஜயகுமார் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். சோழம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.