பதிவு செய்த நாள்
29
ஆக
2022
03:08
வடமதுரை: வடமதுரை கொல்லபட்டியில் ஸ்ரீ வெற்றிவிநாயகர், காளியம்மன், முத்தாலம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை துவங்கிய விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. தீர்த்தம் அழைத்தல், வாஸ்து சாந்தி, ரக் ஷா பந்தனம், கண்திறப்பு, கோ பூஜை, தன் பூஜை, சதுர்வேத பாராயணம், துர்கா, பஞ்சுத்த பூஜைகளை தொடர்ந்து இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர்கள் கிரிராஜன், சப்தகிரிவாசன் நடத்தி வைத்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை கொல்லபட்டி, ஜி.புதூர், எம்.வி.நாயக்கனூர் கிராமங்களின் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.